2025 மே 14, புதன்கிழமை

மாணவர்களும் பெற்றார்களும் கவலை

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை ஆரம்பித்து 90 வருடங்களை தாண்டியும் தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரியில், இன்னும்  க.பொ.த உயர் தரப்பிரிவில் கணித விஞ்ஞான வர்த்தகப்பிரிவுகள் ஏற்படுத்தப்படவில்லையென மாணவர்களும் பெற்றார்களும்  கவலை வெளியிட்டுள்ளனர்.

மூதூர் கல்வி வலயத்திலுள்ள இப்பாடசாலையில் தரம் 01 முதல் 13 வலையான வகுப்புகள் உள்ளதுடன், உயர்தரத்தில் கலைப்பிரிவு மாத்திரமே உள்ளது.

இங்கு உயர் தரத்தில் கணித விஞ்ஞான வர்த்தக பிரிவுகளில் கல்வி பயில வசதி வாய்ப்புகள்  இன்மை காரணமாக இப்பகுதி மாணவர்கள் சிரமத்துடன் ஏனைய இடங்களுக்குச் சென்று பெருமளவு பணத்தைச் செலவிட்டு, கல்வி பயில வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.

இதனை கருத்திற்கொண்டு, இப்பாடசாலையிலும் இப்பிரிவுகளை ஏற்படுத்திக்கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X