ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மான் வேட்டையாடிய கிண்ணியா, கிரான் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சுபாசினி உத்தரவிட்டார்.
திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்று முன்தினம் அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது, கிரான் காட்டுப் பிரதேசத்தில் பல வருடங்களாக மிருக வேட்டையில் ஈடுபட்டு வந்த மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 10.7 கிலோகிராம் மான் இறைச்சியும் கூரிய கத்தி ஒன்றும் அதி சக்தி வாய்ந்த டோர்ச் லைட் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .