எப். முபாரக் / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப சண்டையின் போது, மாமியாரை பொல்லால் தாக்கிக் காயப்படுத்திய மருமகனை, ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
வரோதய நகர், துவரங்காடு,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், தனது மனைவியோடு வாய்த்தர்க்கம் செய்துகொண்டிருந்த வேளையில், மாமி சென்று, மருமகனுக்குத் தகாத வார்த்தைகளால் திட்டியதையடுத்து, கோபம் கொண்ட மருமகன், மாமியாரை, பொல்லால் தாக்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மாமி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .