2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாவீரர் பாடலை பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞன் மன்றில் ஆஜர்படுத்தப்படுவார்

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவில், மாவீரர் தினத்தன்று, மாவீரர்தினம் தொடர்பான பாடலொன்றை, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்ட இளைஞனை, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில், நாளை (30) ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்ட இந்த இளைஞன் 72 மணித்தியாலங்கள் சம்பூர் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பூர் 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X