2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மியன்மார் அகதிகளை சந்தித்தார், ரிஷாட்

Janu   / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோகிங்யர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சனிக்கிழமை  (21) சந்தித்தார். 

மியன்மார் அகதிகளின் நலன்களை விசாரிக்கவும் அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பிலும் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பை ஏற்படுத்திக்கொண்டார். 

வெள்ளிக்கிழமை  (20) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்த மியன்மார் படகில் 115 நபர்களில் மாலுமிகள் உட்பட அதன் உதவியாளர்கள் என 11 பேரை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். 

அதனையடுத்து அவர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அ . அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X