2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

மியன்மார் அரசாங்கத்தால் யானை அன்பளிப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார், ஏ.எம்.ஏ.பரீத், பொன்ஆனந்தம், எப்.முபாரக்

மியன்மார்  அரசாங்கத்தால், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 23 வயதுடைய 8 அடி உயரம் கொண்ட 3.5 தொன் நிறையுடைய யானை, கப்பல் மூலம் நேற்று (18) மாலை திருகோணமலை - அஷ்ரஃப் இறங்கு துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

பௌத்த துறவிகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 1,500 பொதிகளும் இதன்போது கொண்டு வரப்பட்டன.

துறைமுகத்தில் வைத்து, தியவதநிலமே நிலங்க டிய பண்டாரவால் பொறுப்பேற்கப்பட்ட இந்த யானை, கண்டி தலதா மாளிகைக்குக் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X