Suganthini Ratnam / 2017 ஜூலை 04 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
மிரட்டிப் பெண பெற முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, திங்கட்கிழமை (3) உத்தரவிட்டார். தம்பலகாமம் பகுதியில் தவறவிடப்பட்ட வாகன அனுமதிப் புத்தகத்தைக் கண்டெடுத்த இச்சந்தேக நபர்கள், அப்புத்தகத்தை வைத்துக்கொண்டு, உரிய நபரிடம் 25 ஆயிரம் ரூபாயைக் கோரியுள்ளனர்;.
32, 33, 22 வயதுகளையுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நகரைச் சேர்ந்த ஒருவர் தனது வாகன அனுமதிப் புத்தகத்தை தம்பலகாமம் பகுதியில் தவறவிட்டுள்ளார். இப்புத்தகத்தைக் கண்டெடுத்த இச்சந்தேக நபர்கள், அவரிடம் 25 ஆயிரம் ரூபாயைக் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் குறித்த வாகன உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். சந்தேக நபர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
12 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 Mar 2026