2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மிருக வேட்டையில் ஈடுபட்டவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 14 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, கிரான் காட்டுப் பகுதியில்  மிருக வேட்டையில் ஈடுபட்டு வந்த நபரொருவரை, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று (14) அதிகாலை கைது செய்துள்ளனர்

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர், கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதானவர் என, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபரிடமிருந்து, 10.7 கிலோகிராம் மான் இறைச்சியும் கூரிய கத்தி மற்றும்  டோர்ச் லைட் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரை, திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில், திருகோணமலைப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .