2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மீன்பிடிக்க போன அறுவரில் ஒருவர் மாயம்

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகத்துவாரம் பிரதேசத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில், மீன்பிடிக்கச் சென்ற படகு விபத்தில் ஒருவர் மாயமாகியுள்ளார்.

குறித்த படகில் ஆறு பேர் பயணித்த நிலையில், விபத்தை அடுத்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கரைக்கு திரும்பியவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில், திருகோணமலை பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காணாமல் போன இளைஞனை மீட்கும் நடவடிக்கைகள் கடற்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய பாலசிங்கம் பரமானந்தம் என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X