2025 மே 14, புதன்கிழமை

மீன்வாடி தீக்கிரை

தீஷான் அஹமட்   / 2017 ஜூலை 30 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூரல் பகுதியில், கடற்கரை ஓரமாக இருந்த மீன் வாடியொன்று, இனந்தெரியாதவர்களால் கடந்த 28ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தோப்பூரைச் சேர்ந்த எம்.பைஸர் என்பவருக்குச் சொந்தமான மீன் வாடியே, இவ்வாறு எரிந்துள்ளது.

குறித்த மீன்வாடி உரிமையாளர், மதிய நேர உணவுக்காக வீட்டுக்குச் சென்ற போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மீன் வாடி முற்றாக எரிந்துள்ளதோடு, வாடியில் வைக்கப்பட்டிருந்த படகு இயந்திரங்கள் 5, மற்றும் வலைகள் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில், சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .