அப்துல்சலாம் யாசீம் / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாடகைக்கு அழைத்துச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியொருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டிக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (13) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், திருகோணமலை, 03ஆம் கட்டை - புளியங்குளம் பகுதியைச்சேர்ந்த நரேந்திர குமார் (27வயது) என்ற சாரதியே, வெட்டுக் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, தெரியவருகிறது.
முச்சக்கர வண்டியில் மூவர் ஏறிச் சென்றுள்ளனர். இடையில் இன்னுமொருவர் ஏறியதாகவும் அதனையடுத்து நிலாவெளி பெரியகுளம் வீதியினூடாக அழைத்து சென்றதாகவும் தெரியவருகிறது.
இவ்விபத்து தொடர்பில் நிலாவெளி பொலிஸாரும் உப்புவெளி பொலிஸாரும் இணைந்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .