2025 மே 14, புதன்கிழமை

முட்கம்பிகள் வழங்கிவைப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

பதவி சிறிபுர பிரதேசத்திலுள்ள வறிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 23 பேருக்கு  தலா 5,500 ரூபாய் பெறுமதியான வேலிகளுக்கு அடிக்கும் முட்கம்பிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், தனது 2017ஆம் ஆண்டுக்குரிய மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் இருந்து பதவி சிறிபுர விவசாய சேவைகள் நிலைய காரியாலயத்தில் வைத்து நேற்று (18) வழங்கினார்.

இந்நிகழ்வு, முன்னாள் பதவி சிறிபுர  பிரதேச சபை உறுப்பினர் தர்ம கீர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், விவசாய சேவை திணைக்களத்தின் விவசாய திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள்  ஆகியோர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X