Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று சபை அமர்வுக்கான முதல் அமர்வு கிண்ணியா நகர சபையின் சபை மண்டபத்தில் நாளை (11) காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக கிண்ணியா நகர சபையின் பதில் செயலாளர் தெரிவித்தார்.
இச்சபை அமர்வின்போது, தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவுகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னனி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 13 உறுப்பினர்களைக் கொண்டு சபை நடவடிக்கைகள் இயங்கவுள்ளனவென, உள்ளூராட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது அமர்வில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம், உதவி உள்ளூராட்சி ஆணையாளர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025