ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஒக்டோபர் 04 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, செல்வநாயகபுரப் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று (04) மாலை உப்புவெளி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் செல்வநாயகபுரம், அந்தோணியார் வீதியைச் சேர்ந்த, 5 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து கோவிந்தன் (வயது -52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இவரை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடிய போது, பூட்டப்பட்ட அறையொன்றிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, இவரது உடல் , முகம் எறும்புக் கடியினால் பாதிக்கப்பட்டு காணப்பட்டதாகவும், இவர் கடந்த திங்கட்கிழமை (02) உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில், உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .