2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முன்னாள் அமைச்சரால் முகக்கவசங்கள் அன்பளிப்பு

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இன்று (31) பாதுகாப்பு கவசங்களை வழங்கி வைத்தார்.

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு தேவையான  பாதுகாப்பு கவசங்களை வைத்தியசாலை பணிப்பாளர் ஐகத் விக்ரமரத்னவிடம்  அவர் கையளித்தார். 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களையும் ஊழியர்களையும், பாதுகாக்கும் நோக்கில் அவரது சொந்த நிதியிலிருந்து இந்த பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படடுள்ளன.

அத்துடன், மொரவௌ, மஹதிவுல்வௌ, கோமரங்கடவல மற்றும் பதவிசிறிபுர போன்ற பகுதிகளுக்கு முகக்;கவசங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேவின் பாரியார், மொரவௌ சுகாதார வைத்திய அதிகாரி எஸ். முத்துகல, மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி எரங்க குணசேகர,மொரவௌ வைத்தியதிகாரி டொக்டர் போல் ரொஷான் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .