2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முழங்காலிட்டிருந்த சடலம் மீட்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

மரமொன்றுக்கு கீழ், முழங்காலிட்டது போல, கடுமையாக உருக்குலைந்த நிலையிலிருந்த ஆணொருவரின் சடலம், மீட்கப்பட்டுள்ளது.

மண்​டையோடு தெரிந்ததுடன், தலைமுடிகள் முகத்தை முற்றாக மூடியிருந்தன. அந்தச் சடலத்தில், சதைகள் உருகி ஒழுகியிருந்ததுடன், சடலத்தின் கழுத்துக்கும், மரத்துக்குமிடையில் மஞ்சள் நிறத்திலான நைலோன் நூலொன்றும் கட்டப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, கன்னியா, காயத்திரிஅம்மன் கோவில் வீதிக்குப் பின்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள்ளிருந்தே அந்தச் சடலம், இன்று (02) மீட்கப்பட்டுள்ளது.

கன்னியா காட்டுப் பகுதிக்கு விறகு எடுப்பதற்குச் ​சென்றிருந்த நபரொருவர் சடலத்தைக் கண்டு, பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 எனும் இலக்கத்துக்கு வழங்கிய தகவலையடுத்து, மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் உருகுலைந்திருந்தாலும், சாரம், பெணியன் உடம்பில் காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.

சடலத்துக்கு 10 மீற்றர் தூரத்திலிருந்து, பாதணிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்ட நபருடையதாகக் கூறப்படும், சேட், கைக்குட்டை, முஸ்லிம் சகோதரர்கள் அணியக்கூடிய தொப்பியொன்றும்,  சடலத்துக்குச் சற்றுத் தொலைவிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், திருகோணமலையிலிருந்து கன்னியாவுக்கு கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி பெறப்பட்ட  பஸ் டிக்கெட்டும் அந்த சேட் பக்கெட்டுக்குள்ளிருந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவானின் ஸ்தல விசாரணைகள் நிறைவடைந்ததும், சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலைக்குச் சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு செல்லவுள்ளதெனத் தெரிவித்த உப்புவெளிப்​ பொலிஸார், சடலம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X