2025 மே 02, வெள்ளிக்கிழமை

மூதூரில் குடி நீரின்றி 1516 பேர் பாதிப்பு

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எஸ்.எல்.நௌபர்   

கடந்த மூன்று மாதகாலத்துக்கும் மேலாக    நிலவும் வரட்சி காரணமாக இதுவரை  459 குடும்பங்களை சேர்ந்த 1516 பேர் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் குடி நீர் இன்றி பாதிக்கப்படுள்ளதாக தெரிவித்த   பிரதேச செயலாளர் எம்.முபாரக், இவர்களுக்கு தேவையான குடிநீரை   பிரதேச செயலகம் ஊடாக நாளாந்தம்  விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

  சேனையூர் கிராம சேவையாளர் பிரிவில் 105 குடும்பங்களை சேர்ந்த 330 பேரும், நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில் 42 குடும்பங்களை சேர்ந்த 143 பேரும், இக்பால் நகர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 22 குடும்பங்களை சேர்ந்த 96 பேரும்,  பள்ளிக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் 215 குடும்பங்களை சேர்ந்த 620 பேரும்,  கட்டபறிச்சான் தெற்கில் 74 குடும்பங்களை சேர்ந்த. 327 பேரும் குடி நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக மூதூரில் 459 குடும்பங்களை சேர்ந்த 1516 பேரும் இதுவரை குடி நீர் இன்மையால் பாதிக்கப்படுகின்றனர்.

 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X