2025 மே 02, வெள்ளிக்கிழமை

மூதூரில் நடமாடும்சேவை

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

 மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆஸாத் நகர், ஜின்னா நகர் கிராமங்களுக்கான நடமாடும் சேவை நேற்று வியாழக்கிழமை (11) ஆஸாத் நகர் பல்தேவை கட்டிடத்தில் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, காணிப்பிரச்சினை, காலம் தாழ்த்திய இறப்பு பிறப்பு பதிவுகள், தேசிய அடையாள அட்டை பெறுதல், காணி உரிமை பத்திரம் பெறல் தொடர்பான பிரச்சினைகள் ,கிராமத்தின் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்க இந் நடமாடும் சேவையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இவ் நடமாடும் சேவையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோ கத்தர்கள்,காணி உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தமது திணைக்களம் சார்ந்த ஆலோசணைகளை பொதுமக்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X