Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.நௌபர்
மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக், இந்தியாவிலுள்ள Martial Arts பல்கலைக்கழகத்தில், “கௌரவ கலாநிதி” (சமூக நற்பணிக்காக) பட்டம் வழங்கி அண்மையில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியாவைச் சேர்ந்த முத்தலிப் முபாரக், தற்போது மூதூர் பிரதேச செயலாளராக (இலங்கை நிர்வாக சேவை, தரம் - I) கடமை புரிந்து வருகிறார்.
இதற்கு முன்னர், கொழும்பு மாநகர சபை பிரதி ஆணையாளர், நீர் வடிகாலமைப்பு அமைச்சின் சமுதாய நீர் வழங்கல் திணைக்களத்தின் நிர்வாகப் பணிப்பாளர், கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைகள் திணைக்கள ஆணையாளர், கிண்ணியா, ஹொரவப்பொத்தானை பிரதேச செயலாளர் ஆகிய பதவிகளில் கடமை புரிந்துள்ளார்.
இவரது சேவைகளைப் பாராட்டி, இலங்கையில் “தேசமாண்ய விருது“, “டொக்டர் அப்துல்கலாம் சமாதான விருது” ஆகியனவும் இவருக்கு வழங்கப்பட்டன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago