2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மூதூர் பொலிஸாரின் அறிவித்தல்

தீஷான் அஹமட்   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகப் பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருவதால், பொதுமக்கள் தங்களது வீடுகளைப் பாதுகாப்பான முறையில் வைத்திருக்குமாறும், சந்தேகத்துக்கிடமான முறையில் யாராவது நடமாடினால், மூதூர் பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கமான 026 223 8222 என்ற இலக்கத்துக்குத் தகவல் வழங்குமாறும், பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், பெண்கள், தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு இரவு வேளையில் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ளவேண்டுமெனவும், ஒலிபெருக்கி மூலம் மூதூர் பொலிஸாரால், இன்று (24) அறிவித்தல் விடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .