2025 மே 14, புதன்கிழமை

மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் காலமானார்

பொன் ஆனந்தம்   / 2017 செப்டெம்பர் 01 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று (01) காலை காலமானார்.

சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 79ஆவது வயதில் இறைபதம் அடைந்தார்.

சுமார் 55வருடத்திற்கு மேலாக  ஊடகசேவையாற்றிய இவர் தமிழ்,ஆங்கில நாளிதழ்களுடன் இணையத்தளங்களிலும் ஆக்கங்ளை வெளியிட்டுள்ளார்.

யுத்த காலப்பகுதியில் பல நெருக்கடிகளைச்சந்தித்து தனியே ஊடகப்பணியை மட்டும் முழுநேரத்தொழிலாக  நம்பி வாழ்க்கை நடத்தியவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.இதனால் அதிக காலம் பொருளாதார நெருக்கடியுடன் பணிசெய்த இவர். பல விருதுகளைப்பெற்று  வாழ்நாள் சாதனையாளராகவும் திகழ்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(03) காலை 10.30 மணிக்கு திருகோணமலை பிரதான வீதியில் உள்ள அவரது இல்லத்தில்   நடைபெற வுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X