2025 மே 19, திங்கட்கிழமை

மோட்டார் குண்டு செயலிழக்கப்பட்டது

தீஷான் அஹமட்   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரபாநகர் வயல் பகுதியில் இருந்து வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட 81 ரக மோட்டார் குண்டு, திருகோணமலை சர்தாபுர விசேட அதிரடிப்படையினரால் இன்று (24) செயலிழக்கச் செய்யப்பட்டதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வயலைத் துப்பரவு செய்து கொண்டிருந்த நபரொருவர், வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டொன்று கிடப்பதைக் கண்டு, சம்பூர் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்பூர் பொலிஸார், மோட்டார் குண்டைப் பார்வையிட்டு, அவ் குண்டினை செயலிழக்கச் செய்ய மூதூர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X