ஏ.எம்.ஏ.பரீத் / 2018 மார்ச் 05 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின் குட்டித்தீவு, ஜமா ஆதே இஸ்லாமிக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இன்று (05) காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக கிண்ணியா பொலிஸார் தெரித்தனர்.
இவ்விபத்தில் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றில் கணவர் ஒருவர், ஆசிரியையான தன் மனைவியைப் பாடசாலையில் விடுவதற்குத் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரித்தனர்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 minute ago
18 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
21 minute ago