Thipaan / 2016 ஜூன் 28 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பதினைந்தாம் குளம் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகிய ஒருவர், பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்கிழமை (28) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த அப்துல் லத்தீப் (வயது 63) என்பவரே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை மாடுகளை பார்வையிடுவதற்காக பட்டிக்குச் சென்ற போதே, குறித்த நபரை யானை தாக்கியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
46 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
21 Mar 2026