Suganthini Ratnam / 2017 ஜூன் 26 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, நிலாவெளி 10ஆம் கட்டைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர், பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே யானையின் தாக்குதலுக்கு ஞாயிற்றுக்கிழமை (25) உள்ளானான்.
நிலாவெளி 10ஆம் கட்டைப்பகுதியில் இச்சிறுவனின் தந்தை குடிசையொன்றில் தங்கியிருந்து மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாடசாலை விடுமுறை தினமாகையால், இச்சிறுவனும் தந்தையுடன் சென்று அக்குடிசையில் தங்கியிருந்தபோதே இ;ந்த அசம்பாவிதத்துக்கு உள்ளானான் எனவும் பொலிஸார் கூறினர்.
16 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 Mar 2026