2025 ஜூலை 05, சனிக்கிழமை

யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துமாறு மக்கள் ​கோரிக்கை

பொன் ஆனந்தம்   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ஆம் கொலனி மற்றும் சூழவுள்ள  கிராமங்களில்  அண்மைக்காலமாக நிலவி வரும் யானைகளின் அட்காசத்தை கட்டுப்படுத்துமாறு  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பில், அப்பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை,   இன்று (20) காலை 9.30. மணியளவில்  சேருநுவரப்பகுதியில் நடாத்தினர்.

குறித்த பகுதியில் தர்மலிங்கம் வினோவதனன் (வயது 36) என்ற குடும்பஸ்தர், நேற்று  மாலை யானைத் தாக்குதலுக்குள்ளாகி, உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்தே, குறித்த பகுதியில்உள்ள 3ம் கொலணியைச் சார்ந்த  இலிங்கபுரம், ஆதியம்மன்கேணி உள்ளிட்ட கிராமங்களைச்சார்ந்த மக்கள் சேருநுவர நகரில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன், சேருநுவர வைத்தியசாலையிலிருந்து பிரதேச செயலகம் வரை பல பதாதைகளை ஏந்திய வாறு ஊர்வலமாக  சென்றுள்ளனர்.

இதன்போது, பிரதேச செயலகத்தின் முன், பிரதான  வீதியை மறித்து நின்ற மக்களை ,பிரதேச செயலாளர் என்.ஜயரத்தின சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த அவர்,

 உடனடியாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதுடன்,15 நாட்களுக்குள் யானைப்பாதுகாப்பு வேலியை பூரணமாக்குவதாகவும் அதற்கு நீலாப்பளைப்பகுதி வரை மூதுார் பிரதேச செயலகம் வேலியை அமைத்து தரவேண்டும்  அதனுடன் தமது பிரதேச வேலியையும்  இணைத்து பூரத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மக்களுக்க உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .