2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யானைகளின் தாக்குதலால் உடமைகள் சேதம்

எப். முபாரக்   / 2018 ஜூன் 14 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல் ஊற்று பகுதியில், நேற்று (13) இரவு, வீடொன்றை, காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் வீட்டிலுள்ள தளவாடங்களும் வீட்டு உபகரணங்களும் சேதத்துக்குள்ளான எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த, மே மாதமும் இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இரண்டு வீடுகள் சேதமாக்கப்பட்டன எனவும், இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தால் எந்தவிதமான நட்டஈடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X