2025 மே 13, செவ்வாய்க்கிழமை

யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் பலி

தீஷான் அஹமட்   / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர காட்டுப் பகுதிக்கு விறகு எடுப்பதற்காகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார் என்றும் அவரது சடலம், இன்று மீட்கப்பட்டுள்ளது என்றும், சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், தோப்பூர் செல்வநகர் 09 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பிச்சைத் தம்பி முஹம்மது அனீபா வயது (60) என்பவராவார்.

குறித்த நபர் வியாழக்கிழமை காலை சேருநுவர காட்டுப் பகுதிக்கு விறகு எடுக்கச் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்று மாலையாகியும் வீடு திரும்பாமையால், அவரது குடும்பத்தினர் சேருநுவர பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டு, ஊரவர்வர்களுடன் இணைந்து குறித்த காட்டுப் பகுதியில் தேடுதல் நடாத்தியும் சடலம் மீட்கப்படவில்லை.

மீண்டும் சேருநுவர பொலிஸாரும் ஊர் மக்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை சேருநுவர காட்டுப் பகுதியில் தேடுதல் நடாத்திய போது அவர் விறகு எடுப்பதற்காகச் சென்ற துவிச்சக்கர வண்டி கண்டெடுக்கப்பட்டது. இதனை த்தொடர்ந்து மீண்டும் தேடுதல் மேற் கொண்ட போது துவிச்சக்கர வண்டி கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 மீற்றர் தூரத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு, இன்று காலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லா சென்று விசாரணைகளை மேற்கொண்டதோடு, சடலம் அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X