2025 மே 14, புதன்கிழமை

யானைத் தொல்லைகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

பொன் ஆனந்தம்   / 2017 ஜூலை 18 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்லை இடது கரை 3 மற்றும் ஆதியம்மன்கேணி தமிழ்க் கிராமங்களில் அதிகரித்துள்ள யானைத் தொல்லைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கிராமங்களுக்குள் ஊடுருவும் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி, கடந்த வாரப்பகுதியில், விவசாயி ஒருவரும் உயிரிழந்திருந்தார். இந்நிலமையை அடுத்து, கிராமத்தின் சேத விவரங்களைப் பார்வையிடச் சென்ற திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கத்திடம், அங்குள்ள மக்கள், மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர்.

வாழை மற்றும் பயிர்ச்செய்கைகள் பல இங்கு அழிக்கப்பட்டுள்ளன என்றும் தினந்தோறும் தாம் பெரும் பீதியுடனேயே வாழ்வதாகவும், தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், அம்மக்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .