Editorial / 2020 மார்ச் 28 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றிடிகஹவௌ பகுதியில் குடிலிலிருந்து கீழே விழுந்து வயோதிபர் ஒருவர் நேற்றிரவு (27) உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தான-மொரகேவ, றிடிகஹவௌ பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான எல்.பி சோமபால (70 வயது) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தந்தையும் மகனும் வயல் காவலுக்காக சென்றுகொண்டிருந்தபோது, காட்டு யானையைக் கண்டு பயந்து மரத்துக்கு மேலே உள்ள குடிலில் ஏறுவதற்கு முற்பட்டபோதே, தந்தை குடிலில் இருந்து விழுந்தாரென, அவரது மகன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .