2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதுண்டு தந்தை பலி

Freelancer   / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதுண்டு ஸ்தலத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் (17)திகதி செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது. மேலும் திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு செல்லும் ரயிலில் மோதுண்டே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிப்பொத்தானை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான தாவூது சலீம் என்பவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குடிபோதையில் மூவர் மது அருந்திவிட்டு வீடு திரும்பும் போது உயிரிழந்தவர் தண்டவாளத்தில் உறங்கியதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது. 

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் இன்றையதினம்(18) ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X