Freelancer / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தபால் ரயிலுடன் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் கிதுல்உதுவ 154ஆம் கட்டைப் பகுதியில் சனிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் யானை மின்வேலிகள் சிறந்த முறையில் இல்லாமையினால் யானைகள் அதிகளவில் விபத்துக்குள்ளாகி வருவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் ரயிலுடன் மோதி யானைகள் உயிரிழப்பது வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தும் விடயத்தில் உரிய முறையில் கவனம் செலுத்துவது இல்லையென சுட்டிக்காட்டியுள்ளதுடன், இனிவரும் காலங்களிலாவது யானைகளைப் பாதுகாப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026