2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ரூ.5,000 மோசடி; கிராம சேவகர் இடைநிறுத்தம்

Editorial   / 2020 மே 18 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், ஹஸ்பர் ஏ ஹலீம், கீத்

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு பயனாளிகளுக்கு வழங்கும் செயற்பாட்டில், ஆறு நபர்களின் போலிப் பெயர்களை பட்டியலில் உட்படுத்தி மோசடி செய்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சேவை, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இக்கிராம உத்தியோகத்தரின் மோசடி தொடர்பில், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்டச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, ஆரம்ப விசாரணைக்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இதில், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன் ஆகியோரடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணை அறிக்கைக்கேற்ப மேற்படி உத்தியோகத்தரின் சேவையை, மாவட்டச் செயலாளர் இடைநிறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X