George / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை நிலாவெளி பகுதியில் வெங்காய பயிர்ச்செய்கைக்காக தோட்டத்தை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த போது மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
நிலாவெளி 02ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை யோகராஷா என்பவரின் தோட்டக்காணியில் இந்த மிதிவெடி மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
மீட்கப்பட்ட தோட்டத்தில் முன்னர், கடற்படை முகாம் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட மிதிவெடியை கடற்படையினரின் உதவியுடன் செயழிலக்கச் செய்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் கூறினர்.
15 minute ago
25 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
5 hours ago
5 hours ago