Thipaan / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பதினைந்து வயதுடைய சிறுமியின் வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த சந்தேகநபரை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் இல்யாஸ் முஹம்மட் முபாரிஸ், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) உத்தரவிட்டார்.
புபுதுகம, கல்லாறு, பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், அப்பகுதியிலுள்ள பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையிலே அனுமதியின்றி வீட்டுக்குள் புகுந்து சிறுமியோடு கதைத்துக்கொண்டிருந்துள்ளார்.
இதுதொடர்பில், சிறுமியின் பெற்றோர், அவசர பொலிஸ்ப் பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து, சந்தேகநபரை, சனிக்கிழமை (24) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த சந்தேகநபரை, மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026