Thipaan / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம்நகர் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, எரிந்த நிலையில் ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்களை, இன்று திங்கட்கிழமை (10) காலை மீட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜுனைதீன் ஆயிஷா (25 வயது), காமீல் பைரூஸ் (32 வயது) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த ஆண், ஏற்கெனவே மூன்று திருமணங்கள் முடித்து அத்திருமண உறவுகளை முறித்து வாழ்ந்து வந்துள்ளார்.
அத்தோடு, சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணும் கணவருடனான தொடர்பினை முறித்து, உயிரிழந்த நபருடன் தொடர்பினை ஏற்படுத்தி வாழ்ந்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026