2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வீதி செப்பனிடும் பணிகள் பார்வை

Princiya Dixci   / 2016 ஜூன் 15 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். முபாரக்

திருகோணமலை, புல்மோட்டை - கொக்கிளாய் முகத்துவார வீதிகளைச் செப்பனிடும் பணிகளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர், நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலையில் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முதலமைச்சரினால் நிர்வகிக்கப்படும் சுற்றுலாத்துறை பகுதியினால், ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியைக்கொண்டு, குச்சவெளிப் பிரதேச சபையினூடாக, வீதிகளில் சூரியகல மின்விளக்குகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்தச் செயற்பாடுகளைக் கண்டறிவதற்காகவே சுற்றுலா அதிகாரிகள் பார்வையிடச் சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் புல்மோட்டைப் பிரதேசம் சுற்றுலாப் பிரயாணிகளைக் கவரும் பிரதேசமாக மாறும் என நம்பப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X