2025 மே 19, திங்கட்கிழமை

வைத்திய நிபுணர்கள் விடுதி, தாதியர் விடுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Thipaan   / 2016 ஜூலை 23 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர், புல்மோட்டை வைத்தியசாலைகளில் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்திய நிபுணர்கள் விடுதி, தாதியர் விடுதி என்பவற்றுக்கான அடிக்கல், கிழக்கு மாகாண முதலமைச்சர் இஸட்.ஏ.நசீர் அஹமட்  தலைமையில் எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளன.

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரிச் சேவைகள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரினால் இவ்வருடம்  ஒதுக்கப்பட்ட நிதி மூலமே இவ்விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கடந்த வருடம் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரிச் சேவைகள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, கிராமிய மின்சார அமைச்சராக பதவி வகித்த போது, ஒதுக்கப்பட்ட நிதி மூலம் நிர்மாணிக்கப்பட்ட மூதூர், புல்மோட்டை ஆதார வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதி கட்டடங்களும் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுகளில், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

மேலும், இந்நிகழ்வில், அதிதிகளாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், ஜெ.எம்.லாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X