Niroshini / 2016 ஜூலை 02 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்,பதுர்தீன் சியானா
கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றிய பெண் வைத்தியருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரையும், எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணான்டோ, இன்று சனிக்கிழமை (02) உத்தரவிட்டார்.
குறித்த பெண் வைத்தியருக்கு இடையூறு விளைவித்த மூன்று இளைஞர்களை நேற்று வெள்ளிக்கிழமை (01) கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண் வைத்தியர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (30) இரவு கடமையை முடித்து விட்டு விடுதிக்கு சென்ற போது மூன்று இளைஞர்கள் இடையூறு விளைவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடையடுத்து, கிண்ணியா பைசல் நகர் மற்றும் மஹ்ரூப் நகரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை(2) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .