Thipaan / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் பயணித்துக்கொண்டிருந்த வான் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை (13) அதிகாலை 1 மணியளவில், நீதிமன்ற வீதியால் பயணித்துக்கொண்டிருந்த வானுக்குள் இருந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது.
சத்தத்தைக் கேட்ட பொலிஸார், வானை நிறுத்துமாறு சமிக்ஞை வழங்கியுள்ளபோதும், வானின் சாரதி வானை நிறுத்தாமல் செல்ல முற்பட்ட போதே, பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துப்பாக்கி பிரயோகத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த திலீப் குமார் (25 வயது) மற்றும் திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியைச் சேர்ந்த துரைநாயகம் சுதர்ஷன் (34 வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
வானில் பயணித்த மேலும் ஒருவரை விசாரித்து வருவதாகத் தெரிவித்த பொலிஸார், வானை தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago