Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, மொறவெவ மற்றும் தலைமையகப் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஐவர் காயமடைந்த நிலையில் நேற்றிரவு (04) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தானைப் பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி, திரியாய் சந்தியிலுள்ள வளைவில் கால்வாயுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த விபத்தில் கோமரங்கடவெல-கன்தமலாவப் பகுதியைச் சேர்ந்த யூ.எச்.சாறுக்க (வயது 31) மற்றும் நிக்கவெவ-கலன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த எச்.எம்.ஜானக்க (வயது 40) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மஹதிவுல்வெவ குளத்தை அண்மித்த பகுதியிலுள்ள வளைவில் இளைஞர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதில் இருவர் காயமடைந்தனர்.
இதில் ரொட்டவெவப் பகுதியைச் சேர்ந்த ஆர்.றிஹான் (வயது 21) எச்.நப்ரீஸ் (வயது 18) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அத்துடன், திருகோணமலை நகரை அண்மித்த வைரபர் கோயிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த வயோதிபருடன், லொறி மோதியதில் உப்புவெளி-நாவலர் வீதியில் வசித்து வரும் ஈ.பார்த்தீபன் (வயது 50) என்பவர் படுகாயமடைந்துள்ளதுடன், லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துகள் தொடர்பாக மொறவெவ மற்றும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
32 minute ago
39 minute ago
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
44 minute ago
53 minute ago