Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட பகுதியில் நேற்றுக் காலை (03) மோட்டார் சைக்கிளுடன் மாடு மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு கிராம உத்தியோகத்தர்களும் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் மோதிய மாடு அவ்விடத்தில் உயிரிழந்துள்ளது.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள், சிறிபுர, பலுகஸ்வன்குவ பகுதியைச் சேர்ந்த எஸ்.எல்.பீ.நவரெட்ணம் (34வயது) மற்றும் சிங்ஹபுர 13ஆம் வாய்க்காலைச் சேர்ந்த ஏ.ஜி.பிரியந்தகுமார (40வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பதவிசிறிபுர பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, மாடு மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
28 minute ago
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
2 hours ago