Niroshini / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்கலுவான் பாலத்தில் இன்று (10) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 27 வயது நபரும் பாலத்தில் நெல் காய வைத்துக் கொண்டிருந்த 35 வயது நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தோப்பூர் பகுதியைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வான் சாரதி தப்பித்துச் சென்றுள்ளார்.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026