Thipaan / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கைப் பாலத்தருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த ஒருவர், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (16) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், மூதூர் ஆனைச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago