Thipaan / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலைய வாகன திருத்துமிடத்துக்கு முன்னால் முச்சக்கரவண்டிகள் இரண்டும் காரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியொன்றின் சாரதி உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (05) இடம்பெற்ற விபத்தில், திருகோணமலை, பாம் வீதியைச் சேர்ந்த எஸ்.ஜெயஹரன் (28 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026