2025 ஜூலை 31, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 06 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, கிண்ணியாப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன், ஒருவர்  காயமடைந்துள்ளார்.

சூராங்கல் பகுதியிலிருந்து கிண்ணியா நோக்கி வந்த ஜீப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வனவள இலாகாத் திணைக்களத்தின் கம்பிவேலி தூண் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில் சூராங்கல் பகுதியைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான அப்துல் சலாம் அசன் (வயது 54) என்பவரே பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அப்துல் ஹமீது பாரூக் (வயது 47) கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாகனச் சாரதி மதுபோதையில் இருந்துள்ளமை விசாரணையின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .