Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 19 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்துக்குப் பயணித்த பஸ்ஸும் ரிப்பர் வாகனமும், மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடி சந்தியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், நேற்று மாலை 5.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. விபத்துடன் தொடர்புடைய ரிப்பர் வாகனச்சாரதி தப்பித்துச் சென்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .