Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 21 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை, வெருகல் பிரதேச மிருக வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களில் ஏற்பட்டுள்ள ஒருவகை வைரஸ் நோய்த் தாக்கம் காரணமாக இதுவரையில் 120 பசு மாடுகளும் 38 எருமைகளும் இறந்துள்ளதாக வெருகல் பிரதேச விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் செல்வரெத்தினம் டிஷாந், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த ஒருவார காலமாக இங்குள்ள கால்நடைகளுக்கு வயிற்றோட்டம், தாடைவீக்கம், வாயிலிருந்து நுரை வெளிவருதல் போன்ற நோய்கள் பரவி வருவதுடன், உணவு உட்கொள்ள முடியாமலும் நீர் அருந்த முடியாலும் கால்நடைகள் அவதிப்படுவதாகவும் அவர் கூறினார்.
கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்நோய்த்; தாக்கம் காரணமாக கால்நடை வளர்ப்போருக்கு பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது ஒரு வைரஸ் தாக்கம் என்பதுடன், இந்த வைரஸ் ஆடுகள் மற்றும் மாடுகளின் கால்களிலும் வாய்களிலிருந்தும் பரவக்கூடியதென மாவட்ட கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார உதவிப் பணிப்பாளர், கால்நடை வைத்தியர் எஸ்.நிஸாம்தீன் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம்; காரணமாக உணவு மற்றும் காற்றினாலும் கால்நடைகளை ஓரிடத்திலிருந்து வேறிடங்களுக்கு கொண்டுசெல்வதினாலும் இந்நோய் பரவக்கூடியது.
கால்நடைப் பண்ணையாளர்கள் வருடாந்தம் இந்நோய்க்குரிய தடுப்பு ஊசிகளை ஏற்றுவதன் மூலம் இந்நோயிலிருந்து தங்களின் கால்நடைகளைப் பாதுகாக்க முடியுமெனவும் அவர் கூறினார்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்நோய்த் தாக்கம் காரணமாக கால்நடைகளை வெருகல் பிரதேசத்திலிருந்து வேறிடங்களுக்கு கொண்டுசெல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி ஏற்றுதல் உட்பட இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்நோய்த் தாக்கத்துக்குள்ளாகி இறந்துள்ள கால்நடைகளில் ஈரல் மற்றும் கால் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக கொழும்புக்கு கால்நடை வைத்தியப் பிரிவினர் எடுத்துச் சென்றிருப்பதாகத் தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .