2025 ஜூலை 30, புதன்கிழமை

வேலையற்ற இளைஞர்களுக்கான தொழில் சந்தை

Thipaan   / 2016 ஜூலை 24 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன், பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்ட செயலகம்,  மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களம் என்பன இணைந்து நடத்திய தொழில் சந்தை, விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்றது.

குடிபெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் அனுசரணையில் அவ்வமைப்பின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் திருமதி மயூரன் மேரி மார்கிரட் தலைமையில் நடத்தப்பட்ட இச்சந்தையில், 35 தொழில் பயிற்சி வழங்குநர்களும் தொழில் வழங்குநர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

யூனியன் அஸ்யூரன்ஸ் காப்புறுதி நிறுவனம் 5 பேருக்கு  நிரந்தர நியமனத்தை வழங்கி உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின்  11 பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர். இலங்கையிலுள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள்  பல ஆலோசனைகளை வழங்கின. 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  தொழில் தேடிப்பதிவுசெய்தனர்.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக உதவி பிரதேச  செயலாளர் திருமதி  எச்.ஆர்.எம்.பி.அபேயரத்ன, மற்றும் விக்னேஸ்வரா மகா வித்தயாலய அதிபர் திருமதி இந்திராணி முரளிதரன் ஆகியோர் இவர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .