2025 மே 21, புதன்கிழமை

வேலைவாய்ப்பின்றி சுமார் 5,400 இளைஞர்கள்

Suganthini Ratnam   / 2016 மே 18 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்டத்தில் 5,400 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இவர்கள் கட்டட நிர்மாணத்துறை, உல்லாசத்துறையும் உபசரிப்பும், வாகனம் திருத்துதல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பயிற்சிகளைப் பெற முடியும் என உலக கனேடிய பல்கலைக்கழகச் சேவை சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் கவிதா அருணகிரிநாதன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த  புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியுள்ளவர்களின் சமூக, பொருளாதாரம் பற்றிய கலந்துரையாடல், பட்டணமும்சூழலும் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது.

தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புகளை இனங்கண்டு அதற்கான தொழிற்றிறன் பயிற்சிகளை வழங்குவதே தமது நோக்கம் எனவும் அவர் கூறினார்.

எவரும்; வாழ்வாதாரத்துக்காக உதவவில்லை என்று கூறுவதை விடவும் வழங்கப்படும் தொழில் பயிற்சிகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற  வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .